Sunday, September 25, 2016

33. கால நேரம் அதற்கிலை(ஸ்ரீகணேசா)





கால-நேரம் அதற்கிலை-யோகம் ஸ்வாசித்தல் போல-அன்றோ
ஐயா சுவாசிக்க நேரம்-உண்டோ
கால-நேரம் அதற்கிலை-யோகம் ஸ்வாசித்தல் போல-அன்றோ
அம்மா சுவாசிக்க நேரம்-உண்டோ
*1 ஸ்ரீ-பரமாத்மா உடனுறை ஆத்மா
ஸ்ரீ-பரமாத்மா உடலுடன் ஆத்மா
ஸ்ரீ-பரமாத்மா உள்ளுறை ஆத்மா
என்று-நீ உணர்ந்திடு வாழ்க்கையில்-சதா
ஆஹா உணராய் நீ-பரமாத்மா
கால-நேரம் அதற்கிலை-யோகம் ஸ்வாசித்தல் போல-அன்றோ
ஐயா சுவாசிக்க நேரம்-உண்டோ
 எட்டென பதஞ்சலி சொன்னது கேளாய்
எட்டங்கம்-யோகத்தில் உள்ளது பாராய்
அட்டாங்க-யோகத்தில் சொன்னது பூணாய்
சத்துடன் உன்னை-நீ சேர்க்கப் பாரடா
செத்தப் பிறப்பெல்லாம் உனக்கு ஏனடா
கால-நேரம் அதற்கிலை-யோகம் ஸ்வாசித்தல் போல-அன்றோ
ஐயா சுவாசிக்க நேரம்-உண்டோ
கொக்கென மனத்தால் *2 தாரணை பூணாய்
கொக்கென மனத்தால் நீ-நிஜம் தேடாய்
கொக்கென மனத்தால் பூரணம் தேடாய்
அந்த *3 யம-நியம ஆசனம் முதலாய்
ப்ராண நியம-ப்ரத்யா..ஹரமும்-பூணடா
கால-நேரம் அதற்கிலை-யோகம் ஸ்வாசித்தல் போல-அன்றோ
ஐயா சுவாசிக்க நேரம்-உண்டோ
 சத்சங்கம் சேர்ந்து-நீ சாதனை-பயிலாய்
சத்சங்கம் சேர்ந்து-நீ சாதனை-முயலாய்
சத்சங்கம் சேர்ந்து-நீ சாதனை-முடிவாய்
*4 கொஞ்ச-நேரம் *இலானுடன் இருப்பாய்
*5  சித்த விசாலமாய் த்யான த்தைப் பூணுவாய்
கால-நேரம் அதற்கிலை-யோகம் ஸ்வாசித்தல் போல-அன்றோ
ஐயா சுவாசிக்க நேரம்-உண்டோ
 ஸ்ரீ-கை..லாசமும்-உன்..னுள்..ளே-தான்
ஸ்ரீ-வை..குண்டமும் உன்..னுள்..ளே-தான்
ஸ்ரீ-கைலாச-வை..குண்டமுள்ளேதான்
*6 வெளியினில் உள்ளதெல்லாம் இருக்கு-உன் உள்ளேயே-தான்
நீ-இதை உணராய் உள்-சென்று பாராய்
கால-நேரம் அதற்கிலை-யோகம் ஸ்வாசித்தல் போல-அன்றோ
ஐயா சுவாசிக்க நேரம்-உண்டோ
*7 ஈசா-ஈசனே என்று-நீ அணு கணம்
ஈசா-ஈசனே என்று-நீ அனு-கணம்
ஈசா-ஈசனே என்று நீ அனு தினம்
*ஸ்வாமியின் பிணைப்புச்-சமாதியில் கூடணும்
அதன்-பின்னர் நேரம் இருக்குதா கூறாய்
*8 எப்பவும் நீ-தான்
கால-நேரம் அதற்கிலை-யோகம் ஸ்வாசித்தல் போல-அன்றோ
ஐயா சுவாசிக்க நேரம்-உண்டோ
(4)
*1 ஸ்ரீ பரமாத்மா உடனுறை ஆத்மா=த்வைதம்
ஸ்ரீ பரமாத்மா உடலுடன் ஆத்மா= விசிஷ்டாத்வைதம் (Adhwaitham with attribute - Brammam with attribute)
ஸ்ரீ பரமாத்மா உள்ளுறை ஆத்மா=அத்வைதம்


The doctrine of trinity of christianity
I and the Father are one. I am in My Father and you are in Me and I am in you. (Jesus – John 10:30 ; 14:20)



Identify Dhwaithaadhwaitham from this picture ..!

The unity of faiths is adhwaitham too..!

*2 தாரணை = Concentration

அட்டாங்க யோகம்  :
*3  யமம் = Moral Code
நியமம் = Self Purification (of mind)
ஆசனம் = Posture
ப்ராணாயாமம் = Channelizing life force
ப்ரத்யாஹரமும் = Withdrawal of mind from senses
*தாரணை = Concentration
த்யானம் = Deep meditation
சமாதி = Union with the object of meditation

*4  கொஞ்ச-நேரம் *இலானுடன் இருப்பாய் = வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல (Concentrate on God-try..!)
முதலில் கொஞ்ச நேரம் தான் த்யானம் (சமாதியின் முதல்-நிலை) கூடும்.


*5 நெஞ்ச விசாலம் த்யானம் பூணுவாய்
Concentration on God , expands your conciousness (நெஞ்ச விசாலம்). மெய்ஞ்ஞானப் பெருவெளி விரிய,அதில் பயணிப்பதே த்யானம்-தான்.

*6 வெளியினில் உள்ளதெல்லாம் இருக்கு-உன் உள்ளேயே தான் = அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு

*7 ஈசா ஈசனே என்று =சிவனே என்றிருத்தல்,

*ஈசா ஈசன் = தேவாதி தேவன்

  ஈசா ஈசனே என்று நீ அணு கணம் = அணுவுக்கும் அணுவின் பாகமாக இருக்கும் கால நேரத்திலும் இறை நினைவு
ஈசா ஈசனே என்று நீ அனு கணம் =அவ்வாறான ஒவ்வொரு(அனு )  'அணு கணப் பொழுதும்' இறை நினைவு
ஈசா ஈசனே என்று நீ அனு தினம்= இவ்வாறான அணு கணங்களாலான ஒவ்வொரு தினத்திலும் (சதா..) இறை நினைவு

*ஸ்வாமியின் பிணைப்புச் சமாதியில் கூடணும் = “இறை நினைப்பு” சமாதியல்ல - இறைவனுடன் நம் நினைப்பைப் பிணைப்பதுதான் சமாதி. (Supra Conciousness). பிணைத்து நினைப்பே இறைவனாக மாறி நினைப்பு,நினைப்பவன் நினைப்பது (இறைவன்) மூன்றும் ஒன்றாகப் பிணைவதே சமாதியாகும். ( I know, it is a very crude definition of Samaadhi,.. but I’ve tried with my limited understanding.. கண்டவர் விண்டிலர்..விண்டவர் கண்டிலர்..!)

*8 எப்பவும் நீ தான் = மோக்ஷத்தின் பின் , இறைவனுடன் கலந்து ஆதியாக மாறியபின் எப்பவும் (ஆதி) எங்கும் நீ (நான்-என்ற தன்னுணர்வு) மட்டும் தான்



No comments:

Post a Comment