Saturday, September 24, 2016

29 யோகமென்றே (தாயகத்தின் சுதந்திரமே)



யோகமென்றே சுதந்திரத்தைத் தந்தே-யாக்கை
கொள்ளாமை தந்தே-பார் காட்டும்-மோக்ஷம்
(2)
சாதனையால் அலை-மனத்தை நிற்கவைப்போம்
அது-பாரில் படும்-பாட்டை நிறுத்தி-வைப்போம்
(2)
யோகமென்றே சுதந்திரத்தைத் தந்தே-யாக்கை
கொள்ளாமை தந்தே-பார் காட்டும்-மோக்ஷம்
(MUSIC)
சேட்டை-மனம் நிறுத்தும்-வழி காட்டிடும்-யோகம்
அதனை-ஈசன் பாதையிலே திருப்பிடும்-யோகம்
(2)
கூச்சலிடும் எண்ணங்களை நிறுத்திடும்-யோகம்
அமைதியினை மனதினிலே வளர்த்திடும்-யோகம்
(2)
(MUSIC)
பண்பு-வரும் யோகத்தினால் இதயத்தில்-நன்கே
கலக்கமென்றும் அதில்-எழாது யோகத்தின்-பின்பே
ஆதியோடு நம்மைச்-சேர்க்கும் முடிவினில்-கொண்டே
முனைப்பிருந்தால் தடை-உடையும் பொடிப்-பொடி என்றே
(MUSIC)
யோகம் ஒன்..றைப் பற்..றிக்-கொண்டு
குருவார்த்தை சிரம்-மேலே கொண்டு வா வா என் தோழா
(2)
மாட்டுக்குத் தான்-சூடு மனிதர்க்குச் சொல் போதும்
மனதினில் நீ இதைக் கருதிடப் பாராய்
யோகம் ஒன்றைப் பற்..றிக் கொண்டு
குருவார்த்தை சிரம்-மேலே கொண்டு வா வா என் தோழா
(MUSIC)
எல்லார்க்கும்-பாரில் நம்-பரத-நாட்டில் -
மேலான நிலை கொண்ட-யோகம்
(2)
நேர்-வாழ்வு-தந்து நிஜம்-எழப் பாதை
தந்ததைப் யார்-சொல்ல வேணும் வா வா என் தோழா
யோகம் ஒன்றைப் பற்..றிக் கொண்டு

குருவார்த்தை சிரம்-மேலே கொண்டு வா வா என் தோழா




No comments:

Post a Comment