Tuesday, September 13, 2016

21. உலகினிலே ஏதுமில்லை (வளர்ந்த கலை மறந்து விட்டாள்) **



(சம்வாதம்)

உலகினிலே ஏதுமில்லை உணருவாயம்மா
இதை லயித்து-உணர்ந்து துறவிகளே கூறினார்-அம்மா
உலகினிலே ஏதுமில்லை உணருவாயம்மா
இதை நினைத்து-உணர்ந்து யோகக்கலை பூணுவாயம்மா
யோகக்கலை போதுமென்று கூறினாய்-அக்கா
ஒரு இடத்தில்-அமரல் நன்மை-என்று நம்ப-நான் மக்கா
துறவிகளே சொன்னதென்று கூறினாய்-அக்கா
அவர் ஓடிச்-செல்வம் தேடத்-தேவை இருக்குதா-அக்கா
உலகினிலே ஏதுமில்லை உணருவாயம்மா
இதை நினைத்து-உணர்ந்து யோகக்கலை பூணுவாயம்மா
(MUSIC)
செல்வம்-தேவை இல்லையென்று சொல்லலை அம்மா (2)
செல்வத்தையே தேடிடத்தான் சொல்கிறேன் அம்மா
நானும் செல்வத்தையே தேடிடத்-தான் சொல்கிறேன் அம்மா
அமர்ந்திருந்தால் செல்வம்-வந்து சேருமா-அக்கா
சொல்லு அமர்ந்திருந்தால் செல்வம்-வந்து சேருமா-அக்கா
என்றும் கண்ணை மூடிக்கொண்டிருந்தால் ஆகுமா-அக்கா
பலதடவை கேட்டுவிட்டேன் போதுமே-அக்கா
இதை மறுபடியும் கேட்கச்-சொன்னால் முடியுமா-அக்கா  
(MUSIC)
நானும்-உன்போல் கூறிவந்தேன் அறிந்திடாய் அம்மா
பின் நானும்-யோகம் செய்து-உண்மை அறிந்திட்டேன் அம்மா
எனக்கதெல்லாம்  தினமும்-செய்ய முடியுமா-அக்கா
அட என்ன-செய்ய நீயும்-சொல்லு முயல்கிறேன்-அக்கா
உலகினிலே ஏதுமில்லை உணருவாயம்மா
இதை நினைத்து-உணர்ந்து யோகக்கலை பூணுவாயம்மா
(MUSIC)
இன்றுவரை நடந்ததெல்லாம் போகட்டும்-அம்மா (2)
இனி சற்றேனும் அமர்ந்து-யோகம் கொள்ளு-நீ அம்மா (2)
சொல்லுகிறாய் என்று-நானும் முயல்கிறேன்-அக்கா (2)
நான் சிலநிமிட(ம்)..மேனும்-யோகம் புரிகிறேன்-அக்கா
(Ends with Music)



FIRST PAGE


No comments:

Post a Comment