Tuesday, September 6, 2016

15 என்னை யாரென்று (என்னை யாரென்று) **




என்னை யாரென்று கண்டு-கொள்ள நான் பார்க்கிறேன் 
தினம் பலதான சாத்திரத்தில் நான் தேடுறேன் 
நான் பலநூலைப் பலகாலம் படித்தேனம்மா
என் தேடல் தனில்-சென்ற நாள்-கொஞ்சமா
 என்னை யாரென்று கண்டு-கொள்ள நான் பார்க்கிறேன்
(MUSIC)
வெறும் படிப்பாலே தனில்-மட்டும் நலன்-ஏதய்யா 
முடிக்காமல் செயல்-தன்னில் பலன்-ஏதய்யா 
கனி-என்ற சொல்-என்றும் இனிக்காதய்யா (2) 
தூற்றாமல் உமி-நெல்லில் போகாதையா

யோகம் கொளல்-விட்டு நூல்-மட்டும் ஏன்-கற்கிறாய்
(MUSIC)
இன்று வரை-நூலின் புழுவாக இருந்தேனம்மா 
என்-கண்ணை நீ-இன்று திறந்தாயம்மா
அறிவொன்று நீ-கூறித் திறந்தாயம்மா 
குரு வென்று நீ-கூறித் திறந்தாயம்மா
இனி-நானும் என்-செய்ய சொல்வாயம்மா
என்னை யாரென்று கண்டு-கொள்ள நான் பார்க்கிறேன் 
நான் பலநூலைப்  பல காலம்  படித்தேனம்மா 
(MUSIC)
என்றும் நமக்காக உயர்கீதை துணை இல்லையா -அதில் 
ஒரு பாதை உயர் யோகம் என இல்லையா
நமக்காக அவன் தந்த வரமல்லவா (2)
நல் யோகம் நீ-இன்று பயிவாயய்யா


இன்று தான்-என்னை காண்- உண்மை கண்டேனம்மா 
இனி நான்-யோகம் தவறாமல் செய்வேனம்மா 
இன்று தான்-என்னை காண்- உண்மை கண்டேனம்மா



No comments:

Post a Comment