Wednesday, August 10, 2016

7 எங்குமிலை இலையே (சின்னஞ்சிறு கிளியே)






பல்லவி
எங்குமிலை இலையே யோகம்-போல் நன்மை-தரும் கலையே

அனுபல்லவி
இம்மை மறுமையிலே-யோகம் ஏற்றம்  ளிக்குமன்றோ
எங்குமிலை இலையே யோகம்-போல் நன்மை-தரும் கலையே


சரணம்
இன்றைக்கிங்கிப்பொழுதே அம்மம்மா யோகமெனும் அறமே 
கொண்டு உயர்ந்திடவே நீ சென்று நாடிப் பெறுவாயே
எங்குமிலை இலையே யோகம்-போல் நன்மை-தரும் கலையே

கோடி பிறப்பினிலும்  அம்மம்மா உன்னைத் தொடருடி
நாடி குருவைக் கொண்டால் யோகத்தால் ஊழும் விலகுடி

உச்சி..யில்-வான் விழுந்தால் அதையும் தாங்கி-இருக்கும்படி 
சக்திதன்னைப் பாராய் அழகாய் யோகம்-கொடுக்குமடி

எண்ணத்தைக் கட்டிவிட்டால் யோகத்தால் நற்கதி கிட்டுமடி
தன்னை உணர்ந்திடிலோ அம்மம்மா  சின்மயமாகுமடி

உள் கண்ணை நீ திறப்பாய் யோகத்தால் குருவின் வாக்குப்படி 
பின் உன்னில் தோன்றுமன்றோ கண்ணன்-தாள் உன்னுயிர் உய்யுமன்றோ

உன்னுயிர் உய்யுமன்றோ (2)








No comments:

Post a Comment