Monday, August 8, 2016

5 வெளித்தெரியாத பலன் யாவும்(ஒளிமயமான எதிர்காலம்) **




வெளித்தெரியாத பலன்-யாவும் நல் யோகத்தில் புதைந்திருக்கு
(Short Music) 
இந்த உலகில் நலமுடன் வாழப்பாதை யோகம்-தருகிறது
வெளித்தெரியாத பலன்-யாவும் நல் யோகத்தில் புதைந்திருக்கு
(MUSIC)
நாலெனப் பாதம் பதஞ்சலி யோகம் திகழுது பார்-அங்கே 
அதை நமக்கென-சீராய் தரும்-அவர் பாதம் பணிந்ததைப் பயில்-இன்றே
(1+SM+1)
நாளை செய்வேன் என்றே கூறும் சோம்பலை விரட்டின்றே 
போகப் போகத் துலங்கும்-ஜோதியைப் பார்த்திடுவாய் நன்கே
(short music)
வெளித்தெரியாத பலன்-யாவும் நல் யோகத்தில் புதைந்திருக்கு
(MUSIC)
எங்கணும்-வெளியே உன்-நிஜம் இலையே நீ இதனை அறிய 
நெஞ்சக் கோவிலில் வாழும் ஆன்மம் தெய்வம் நீயதனை உணர
(1+SM+1)
அன்பெனும் ஸ்வாமி உன் மனம்-மேவி இருந்திடவே வரவே 
நாளும் யோகம் புரிந்திட வேணும் என அறிவாய் உடனே
(music)
வெளித்தெரியாத பலன்-யாவும் நல் யோகத்தில் புதைந்திருக்கு
இந்த உலகில் நலமுடன் வாழப்பாதை யோகம்-தருகிறது
வெளித்தெரியாத பலன்-யாவும் நல் யோகத்தில் புதைந்திருக்கு








No comments:

Post a Comment