Wednesday, February 24, 2016

1.39. இன்பம் விரும்பும்(எண்ணப் பறவை சிறகடித்து)

39. யதாபிமதத்யானாத்வா
தான் விரும்பும் ஒன்றை த்யானிப்பதன் மூலமும் அமைதி கிட்டும். எனவே உயர்ந்ததையே விரும்பு
______________

இன்பம்-வி..ரும்பும் என்-மனமே இன்பம் நிலைக்கின்றதா 
நீ எதைப்-பெ..றி..னும் உன்..னுடனே அதுவும் இருக்கின்றதா
(1+Short Music+1)
MUSIC
சென்றே-தேடும் கொண்டாட்டங்கள் என்றும்-இருக்கிறதா 
உந்தன்-தேகக் கொண்டாட்டங்கள் என்றும்-இருக்கிறதா
உயிரும் சென்றுடல்-விறகில் எறிந்ததன்-பிறகு என்பும்-இருக்கிறதா (2)
(Short Music)
சிற்றின்பம் என்றால் நிலைப்பது இல்லை உனக்கது தெரியல்லையா
உண்மை-அறிந்தும் உன்னை-உணர மறுப்பது-தவறில்லையா
இன்பம்-வி..ரும்பும் என்-மனமே இன்பம் நிலைக்கின்றதா 
நீ எதைப்-பெ..றி..னும் உன்..னுடனே அதுவும் இருக்கின்றதா
(MUSIC)
நீரலை-மேலே நீ-இலை போலே சென்றே-கசங்கிடவா 
உன்னைத் தெரிந்து-கொள்ளாமல் உலகின்-பின்னாலே சென்றே மயங்குகிறாய் 
(1+Short Music+1)
தாமரை-மேலே நீரினைப்-போலே வழுக்கி மிதந்திருப்பாய் 
(2)

பேரமைதி-எனும் நிலை-கொள்ள உயர்ந்ததை நினைத்திருப்பாய்
இன்பம்-வி..ரும்பும் என்-மனமே இன்பம் நிலைக்கின்றதா
நீ எதைப்-பெ..றி..னும் உன்..னுடனே அதுவும் இருக்கின்றதா

No comments:

Post a Comment