Tuesday, August 4, 2015

1.25. அனைத்தும் அறிந்த உணர்வே (நினைக்கத் தெரிந்த மனமே)




( நினைக்கத் தெரிந்த மனமே )
தத்ர நிரதிசயம் 
 சர்வஜ்ஞத்வ பீஜம் ||
ஞான முதல்வனான இறைவன்
அனைத்துமறிந்த ஞான விதைதான் இறைவன்
_______________________________________
அனைத்தும்-அறிந்த உணர்வே இறைவன் என்று-தெரியாதா
விளங்கும் ஞான விதையே இறைவன் என்று-புரியாதா
இறைவன் என்று-புரியாதா
(1+SM+1)

மயக்கம் அறுத்த அறிவே இறைவன் என்று-தெரியாதா
மனதில் பிறக்கும் அன்பே இறைவன் என்று-தெரியாதா
நெஞ்சே உனக்குத் தெரியாதா

அனைத்தும்-அறிந்த உணர்வே இறைவன் என்று தெரியாதா
விளங்கும் ஞான விதையே இறைவன் என்று புரியாதா
இறைவன் என்று புரியாதா
(MUSIC)
படைத்து உலகில் நிறைந்தான் அவனே என்று தெரியாதா
கிடைத்த..தவனே-அளித்தான் நெஞ்சே உனக்குத் தெரியாதா
உனக்குள் மறைந்து கிடந்தான் என்றே உனக்குத் தெரியாதா
உயிரைப் படைக்கும் அன்பே அவனின் உருவம் அறியாயா
அன்பே இறைவன் அறியாயா  

அனைத்தும்-அறிந்த உணர்வே இறைவன் என்று தெரியாதா
விளங்கும் ஞான விதையே இறைவன் என்று புரியாதா
இறைவன் என்று புரியாதா
(MUSIC)

கொதிக்கும்-சூர்ய ஒளியே நிலவின் குளிரும் அறியாயா
குளிரில்-உறையும் நெருப்பே இறைவன் என்று அறியாயா
தெரிந்த எதுவும் அவன்தான் என்று நீயும் அறியாயா
பிரிந்த பலதும் அவன்-தாள் ஒன்றே என்று அறியாயா
அவன்-தாள் ஒன்றே அறியாயா

அனைத்தும்-அறிந்த உணர்வே இறைவன் என்று தெரியாதா
விளங்கும் ஞான விதையே இறைவன் என்று புரியாதா
இறைவன் என்று புரியாதா




No comments:

Post a Comment