Wednesday, July 1, 2015

1.12. இதுதான் யோகமா(இதுதான் உலகமா)

 
 
( இதுதான் வாழ்க்கையா )
 
அப்யாஸ வைராக்யாப்யாம் தன்னிரோத : || 
மனம் அடக்குதல்
மன அலைகளை அடக்க வேண்டுவது பற்றற்ற தன்மையே.
அதைப்பெற வைராக்யப்  பயிற்சியே வழி.

இதுதான் யோகமா இது தான் த்யாகமா
சுயநலமே வேண்டிச் செய்தாடல் பூஜையா
(2)
இதுதான் யோகமா
(MUSIC)

நான்-பல பூஜை புரிந்து வந்தேனே
சுயநலம்-தானே வேண்டிப் பெற்றேனே
(1+Short Music+1)
 உடலின் பற்றாலே உயர்விழந்தேனே
மன-அலை-மோதி அலைந்திருந்தேனே
இதுதான் யோகமா இது தான் த்யாகமா
சுயநலமே வேண்டிச் செய்தாடல் பூஜையா
இதுதான் யோகமா

(MUSIC)
கணம்-வரும்-ஆசை அலைகளைக் கொன்றே
சார்பு-இல்லாத நடு-நிலை-நின்றே
(1+Short Music+1)
பதஞ்சலி யோகம் இதுவெனக் கொண்டே
உலகினில் சேவை செய்திடல் நன்றே
  இதுதான் யோகமா இது தான் த்யாகமா
சுயநலமே வேண்டிச் செய்தாடல் பூஜையா
  இதுதான் யோகமா இது தான் த்யாகமா
 
___________
 

No comments:

Post a Comment