Wednesday, June 24, 2015

1.4. அடடா மனதில் வரும் ஆசைகொண்டே (அழகன் முருகனிடம்)

  
(அழகன் முருகனிடம்)
 
 
வ்ருத்தி சாருப்ய மிதரத்ர ||
மனத்தின் மருட்சி
நாம் மன அலைகளுக்குள் சிக்கியிருக்கும்போது அந்த மன அலைகளுக்கு ஏற்பவே செயல் படுகின்றோம். நம் உண்மையான தன்மையிலிருந்து விலகி விடுகின்றோம்
_______________
 

நித்தியம் மனம் வந்திடும் ஆ..ஆ..ஆ..
ஆசைகள் இடர்களே தந்திடும்

அடடா மனதில் வரும் ஆசைகொண்டே..ஆ..ஆ..ஆ..
(MUSIC)
அடடா மனதில் வரும் ஆசை கொண்டே
 
பார் அதனிடத்தில் நான்-வகையாய் மாட்டிக்கொண்டேன்
(1+Short music+1)
விட்டில் எனச் சுடரின் அருகில் சென்றே அதன்
அழகில் மயங்கி அந்தோ பொசுங்கி விட்டேன்

(2) + ஆ..ஆ..ஆ..
அடடா மனதில் வரும் ஆசை கொண்டே
பார் அதனிடத்தில் நான்-வகையாய் மாட்டிக்கொண்டேன்
(MUSIC)

பனி-என ஆசைகளே மனத்திரை போட்டபின்னே ஆ..ஆ..
பனி-என ஆசைகளே மனத்திரை போட்டபின்னே
காணும் பொம்மலாட்டத்திலே  உண்மைநிலை மறந்துவிட்டேன்
காணும்பொய்மை ட்டத்திலே உண்மைநிலை மறந்துவிட்டேன்
என்னுடலை உண்மை-என்றே எண்ணி-வந்த அந்நிலையில் (2)
உண்மையாய் ஆத்துமம்-தான் உள்ளதை மறந்து விட்டேன்
உண்மையை மறந்துவிட்டேன் ஆ..ஆ..
   அடடா மனதில் வரும் ஆசை கொண்டே
பார் அதனிடத்தில் நான் வகையாய் மாட்டிக்கொண்டேன்
(MUSIC)

மலை-மேல் ஒரு-கணமும் மடுவில் மறு-கணமும் (2) 
நெஞ்சலைந்து திரிந்து-வந்தால் உண்மை-தான் தெரிந்திடுமோ (2)
உள்ளே உளதாமே ஆன்மா அசையாமே (2)
பொய்யின்-பின் சென்ற-மனம் ஆன்மத்தை உணராதே
ஆன்மத்தை உணராதே … ஆ..ஆஆஆ..
  அடடா மனதில் வரும் ஆசை கொண்டே
பார் அதனிடத்தில் நான் வகையாய் மாட்டிக்கொண்டேன்
 
____________
 
 

No comments:

Post a Comment