Wednesday, June 24, 2015

1.3. உலகத்தினுள்ளே(சின்னப் பயலே)

 
(சின்னப் பயலே)

 ததா த்ரஷ்டு :
ஸ்வரூபேஸ வஸ்தானாம் ||
யோகத்தின் பயன்
யோகம் மூலம் மனத்தை ஒருமுகப் படுத்தும்போது சொந்த இயல்புடன் சுதந்திரமாக விளங்கலாம் 
______________


உலகத்தினுள்ளே உலகத்தினுள்ளே ஏதுமில்லடா (2)
 உன் தொல்லைகள்-எல்லாம் எண்ணங்களாலே வந்ததேயடா 
நீ கொண்ட நோயடா
(Short Music)
உலகத்தினுள்ளே உலகத்தினுள்ளே ஏதுமில்லடா
(MUSIC)
நாளும் மனமெனும் குதிரையைப் பழக்கணும் அதுதாண்டா பயிற்சி (2)
உந்தன் ஆசையாவும் ஓய்ந்த-பின்னாலே எழுமே நிஜம்-எனும் மிளிர்ச்சி
   ஆசை யாவும் ஓய்ந்த-பின்னாலே எழுமே நிஜம்-எனும் மிளிர்ச்சி

நாளும் ஜபத்தோடு சேவை-புரிந்திட கொள்வாயே முயற்சி
நான் மறை-கூறிடும் உண்மையுமதுதான் நீ-காணு முதிர்ச்சி
உலகத்தினுள்ளே உலகத்தினுள்ளே ஏதுமில்லடா 
(MUSIC)
தெளிந்த-நீரில் துல்லியமாகும் உனது பிம்பமாய் நன்றாய் உனது பிம்பமாய் 
கலங்கி இரும் நீரினில் தோன்றும் கலக்கமேயடா பொய் கலகமேயடா
நீர்-போல்-மனம் தெளிந்திடக் காட்டும் உனது-மெய்யடா யார் என்ற-மெய்யடா (2)
தானாய்த் தோன்றும் உடலதன் தோற்றம் பெரிய பொய்யடா 
அறிவாய் பெரிய பொய்யடா
உலகத்தினுள்ளே உலகத்தினுள்ளே ஏதுமில்லடா  
(MUSIC)
ஆத்துமத்தின் ஞானத்தை-வேண்டி ஆயிரம்-பேர் துணையினை நாடி (2)
 வீணாக வெளியில் போய்-நீ தேடுகிறாயே
உந்தன் நேரத்தை பயன்-இ
ல்லாமல் செலவு செய்தாயே
தேவையற்று வெளியுலகில் உள்ளிருக்கும் மெய்ப்பொருளை (2)
தேடித்-திண்..டாடிப்-போய்-நீ ஏமாறாதே நீ
 கையில்-வெண்ணையை வைத்துக்-கொண்டே நெய்க்கலையாதே
நீ பொய்க்கலையாதே

உலகத்தினுள்ளே உலகத்தினுள்ளே ஏதுமில்லடா 
___________
 

No comments:

Post a Comment