Tuesday, June 30, 2015

1.11. மனதில் வரும் (இரவு வரும் பகலும் வரும்)

( இரவு வரும் பகலும் வரும் )
 
அனுபூத விஷயாஸஸம்ப்ரமோஷ:
ஸ்ம்ருதி : ||

நினைவுப் பதிவு(Memory)

நினைவு மனதில் பல பதிவுகளை ஏற்படுத்துகின்றது. பின்னர் அந்த பதிவுகளே மேல் தளத்துக்கு வருகின்றன.

மனதில் வரும் நிகழ்வுகளும் பதிந்து போகுதாம்
பதிவுகளே நினைவுகளாய் எழும்பி வருகுதாம் பிறகு வருகுதாம்
(2)
(MUSIC)

கிணறிலூறும் நீரை வெள்ளம் கொண்டு போகுதா
கிணறிலூறும் நீரை-வெள்ளம் கொண்டு-போகுதா கொண்டு-போகுதா
ஊறி-வரும் நீரைப் போல எண்ணம் பெருகுதாம் நினைவு ஆகுதாம்
மனதில் வரும் நிகழ்வுகளும் பதிந்து போகுதாம்
பதிவுகளே நினைவுகளாய் எழும்பி வருகுதாம் பிறகு வருகுதாம்
(MUSIC)

அழுத்திப் பிடிக்கும் பந்து-நீரில் அமிழ்ந்து போகுதா அமிழ்ந்து போகுதா
(1+SM+1)
அழுத்தி-வரும் கரம்-விலக மேலெழும்புதாம் மிதந்து வருகுதாம்
மனதில் வரும் நிகழ்வுகளும் பதிந்து போகுதாம்
பதிவுகளே நினைவுகளாய் எழும்பி வருகுதாம் பிறகு வருகுதாம்
(MUSIC)

பிறப்பு-என்று உள்ள-போது இறப்பு உண்டுதான் இறப்பு உண்டுதான்
(1+SM+1)
இறப்பதுவும் மறுபடியும் பிறக்க என்று-தான்
இறப்பதுவும் மறுபடியும் பிறக்க என்று-தான் *நினைவு கொண்டுதான்
மனதில் வரும் நிகழ்வுகளும் பதிந்து போகுதாம்
பதிவுகளே நினைவுகளாய் எழும்பி வருகுதாம் பிறகு வருகுதாம்
மனதில் வரும் நிகழ்வுகளும் பதிந்து போகுதாம்
நினைவு என்றுதான்
 
* சம்ஸ்காரம்
___________
 
No comments:

Post a Comment